67 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாடாளுமன்றத்தை துவக்கி வைக்க உள்ள மன்னர் சார்லஸ்

#Parliament #UnitedKingdom #Canada #KingCharles
Prasu
6 hours ago
67 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாடாளுமன்றத்தை துவக்கி வைக்க உள்ள மன்னர் சார்லஸ்

மகாராணி எலிசபெத் கனடாவின் ராணியாக இருந்தபோது, 1957ஆம் ஆண்டு, கனடாவின் நாடாளுமன்றத்தைத் துவக்கிவைத்தார்.

சுமார் 67 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மன்னர் சார்லஸ் கனடா நாடாளுமன்றத்தைத் துவக்கிவைக்க இருக்கிறார்.

விடயம் என்னவென்றால், அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டும் அல்ல. இன்றியமையாத ஒரு நிகழ்வும் ஆகும். காரணம், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மன்னரின் ஆட்சியின் கீழிருக்கும் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். 

இப்படிப்பட்ட ஒரு சூழலில், கனடா இன்னமும் மன்னரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கனடா விற்பனைக்கு அல்ல, இப்போதும் அல்ல, எப்போதும் அல்ல என்பதை ட்ரம்புக்கு சொல்லாமல் சொல்வதற்காக மன்னர் சார்லஸ் எடுக்கும் ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. 

ஆக, சுமார் 67 ஆண்டுகளுக்குப் பின், அதுவும் சார்லஸ் மன்னராக பதவியேற்றபின் முதன்முறையாக, அவரும் ராணியும் கனடாவுக்கு வருகை புரிய இருக்கிறார்கள்.

அடுத்த வாரம், அதாவது, மே மாதம் 26 மற்றும் 27 திகதிகளில் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கனடா வரும் நிலையில், மன்னர் சார்லஸ் நாடாளுமன்றத்தைத் துவக்கிவைத்து, அரியணையில் அமர்ந்து உரையாற்ற இருக்கிறார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747812249.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!