ரவி மோகனிடம் இருந்து மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கோரும் ஆர்த்தி

#Actor #TamilCinema # divorce #Court
Prasu
1 year ago
ரவி மோகனிடம் இருந்து மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கோரும் ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். 

அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று ரவி மோகன் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து இவ்விரு மனுக்கள் மீதும் இருவரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747853358.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4