கனடாவில் கட்டிட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கனடாவின், மொன்ரியாலின் வட பகுதியில் அமைந்துள்ள பிளேன்வில்லே நகரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசெல்-பொஹெக் புல்வதியில் கட்டுமானத்தில் இருந்த வணிகக் கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் இருந்து உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது என பிளேன்வில்லே காவல் துறையின் பேச்சாளர் சாரா டூசிஞ்யா தெரிவித்துள்ளார். உயிரிழந்த தொழிலாளியின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால், அந்த பகுதியில் மண் மிகவும் அபாயகரமான நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவே இடிபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தனது இரங்கலை வெளியிடுவதாக கியூபெக் தொழிலாளர் பாதுகாப்பு அமைச்சரும், ஜீன் புலே, தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



