புதிய மாணவர் விசா நியமனங்களை இடைநிறுத்தியது ட்ரம்ப் நிர்வாகம்
#America
#world_news
#Lanka4
#Trump
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 day ago

வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா நேர்காணல்களை திட்டமிடுவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிற்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைகழகங்களில் கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களினதும் சமூக ஊடக பதிவுகளை ஆராய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தயாராகிவரும் நிலையிலேயே இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் அமெரிக்க பல்கலைகழகங்களில் இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹவார்ட் பல்கலைகழகத்துடனான டிரம்பின் மோதல் ஆகியவற்றை தொடர்ந்தே டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்கலைகழங்களை மார்க்சிய வெறிபிடித்தவர்கள் மற்றும் பைத்தியக்காரர்களிற்கான புகலிடங்கள் என டிரம்ப் பலமுறை விமர்சித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



