நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியை கைப்பற்ற சுமந்திரன்-விக்கி உடன்படிக்கை!

#SriLanka #M. A. Sumanthiran #Nallur #Lanka4
Mayoorikka
1 month ago
நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியை கைப்பற்ற சுமந்திரன்-விக்கி உடன்படிக்கை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் இன்று மாலையில் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர்.

 இந்த உடன்படிக்கை இன்று மாலை கொழும்பில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் கையெழுத்திடப்பட்டது.

 உடன்படிக்கையின்படி நல்லூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வழங்கப்படுகின்றது.

 இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபைக்காக மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் தமிழ் மக்கள் கூட்டணி இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் என்றும் தெரியவந்தது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!