இஸ்ரேல் - ஈரான் பதற்ற நிலை! எண்ணெய் விநியோகதத்திற்கு பாதிப்பில்லை

#world_news #Fuel #Israel #Lanka4 #Iran
Mayoorikka
11 months ago
இஸ்ரேல் - ஈரான் பதற்ற நிலை! எண்ணெய் விநியோகதத்திற்கு பாதிப்பில்லை

இஸ்ரேல் - ஈரான் பதற்ற நிலைமைக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படாது வழமை போல நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 13 சதவீதத்தினால் அதிகரித்தது.

 பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 7 சதவீதம் குறைவடைந்து, கடந்த திங்கள் கிழமை முதல் வழமை போன்று எண்ணெய் வர்த்தகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த மோதல்களால், முக்கிய எண்ணெய் பரிமாற்று மையங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் எதிர்வரும் நாள்களிலும் இவை மூடப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நம்பப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750284781.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4