கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் மந்தநிலை

#Canada #people #government #population
Prasu
11 months ago
கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் மந்தநிலை

கனடாவின் சனத்தொகை தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 முதல் காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் மந்தமாகியுள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 1 வரையிலான காலத்தில், கனடாவின் மொத்த சனத்தொகை வெறும் 20,107ல் மட்டுமே அதிகரித்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகை 41,548,787 ஆக உயர்ந்துள்ளது. இது 2020ன் மூன்றாவது காலாண்டுக்குப் பின் காணப்படும் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.

இந்த தரவுகள், 2024ம் ஆண்டு கனடா மத்திய அரசு தற்காலிக மற்றும் நிரந்தர குடியேற்ற அளவுகளை குறைக்கும் முடிவெடுத்ததற்குப் பின் ஆறாவது தொடர் காலாண்டாக மக்கள் தொகை வளர்ச்சி பின்னடைந்துள்ளதைக் காட்டுகின்றன.

இந்த காலாண்டில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக இருந்தாகவும், 5,628 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750321316.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4