இன்றைய ராசிபலன் (22.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (22.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 
அசுவினி: நிதானம் காக்க வேண்டிய நாள்.வேலைகளில் சிறு சிறு தடை உண்டாகும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வாடிக்கையாளர் வருகை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும்.கார்த்திகை 1: வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அவசர வேலைகளால் நெருக்கடி ஏற்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். திடீர் செலவு தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.ரோகிணி: எடுத்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். ஒருசில வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலை முடியும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். கடன்களை அடைப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை இன்று பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்: 
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். உங்கள் அனுகு முறையால் நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்: 
மகம்: பெரியோரின் ஆதரவால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உங்கள் முயற்சி லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.பூரம்: தனியாரில் வேலைப் பார்ப்பவருக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னை வாசல் கதவைத்தட்டும். நிலைமைகளை சமாளிப்பீர்.உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பெரியோர்கள் ஆலோசனையை ஏற்பீர். நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமம் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும். அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
சித்திரை 1,2: ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

துலாம்: 
சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். விருப்பம் நிறைவேறும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். மனத்தெளிவு ஏற்படும்.சுவாதி: வியாபாரத்தில் நேரடி கவனம் அவசியம். என்றோ ஏற்பட்ட ஒரு பிரச்னை மீண்டும் விசுவரூபம் எடுக்கும். அதை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களால் வேலை நடக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றைய முயற்சி எளிதாக நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும். வருமானம் உயரும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.

தனுசு: 
மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.பூராடம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.உத்திராடம் 1: நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்.

மகரம் : 
உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். வரவேண்டிய பணம் வரும். நட்புகளால் உங்கள் வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: ஒரு சில வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்த்ததை அடைவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: யோகமான நாள். முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்.சதயம்: எதிரி கை ஓங்கும் என்றாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பண வரவு உண்டாகும்.உத்திரட்டாதி: குடும்ப உறவுகளிடம் கோபம் காட்டாமல் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.ரேவதி: நினைத்தது நிறைவேறும். தடைபட்ட வருமானம் வரும். வீட்டில் புதிய பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனம் தெளிவாகும்.
லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750544358.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!