இன்றைய ராசிபலன் (23.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 hours ago
இன்றைய ராசிபலன் (23.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 
அசுவினி: நன்மையான நாள். நேற்றைய நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். மனக்குழப்பம் தீரும்.
பரணி: வெளியூர் பயணம் வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்.
கார்த்திகை 1: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனம் தெளிவடையும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிக்க முடியாமல் இழுபறியாகும்.
ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப் படுத்துவர். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் மாறுபடும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
திருவாதிரை: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். செலவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.

கடகம்: 

புனர்பூசம் 4: லாபமான நாள். விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும்.

பூசம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்: 
மகம்: வியாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். பணியாளர் ஒத்துழைப்பால் நினைத்த வேலை நடக்கும்.
பூரம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிறு முதலீட்டிலும் லாபம் கூடும். பிரச்னை விலகும் நாள்.
உத்திரம் 1: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் லாபம் கூடும்.சித்திரை 1,2: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்: 
சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்புடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். சுவாதி: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வாகனப்பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.விசாகம் 1,2,3: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்கு வாதம் உண்டாகும். அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்: 
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கேட்டை: நிதானமாக செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும். உங்கள் செயல் லாபம் தரும்.

தனுசு: 
மூலம்: யோகமான நாள். மனக்குழப்பம் நீங்கும். திறமை வெளிப்படும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். நினைத்ததை சாதித்து முடிப்பீர்.பூராடம்: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.உத்திராடம் 1: தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.திருவோணம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்படுவதால் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினருக்கு உதவி செய்து மகிழ்வீர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்.சதயம்: வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். மனம் குழப்பமடையும். உங்கள் விருப்பம் இழுபறியாகும்.பூரட்டாதி 1,2,3: அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். ஒரு சிலர் வீண்பழிக்கு ஆளாவீர். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750630849.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!