இன்றைய ராசிபலன் (26.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 hours ago
இன்றைய ராசிபலன் (26.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்: 
அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். தடைகளைத்தாண்டி நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும்.
பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரம் விருத்தியாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.
கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு பணியில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.  

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். பண நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை கொடுத்து அனுப்புவீர்.
மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும். 

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: உற்சாகமான நாள். செயல்களில் லாபம் காண்பீர். திட்டமிட்ட முயற்சி ஆதாயமாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.
திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடத்தை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.
புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே உயர்வைக்காண்பீர். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும். 

கடகம்: 
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் உண்டாகும். முயற்சியில் இருந்த தடை விலகும்.
பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் காண்பீர்.
ஆயில்யம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக்குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்: 
மகம்: லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.
பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
உத்திரம் 1: தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். 

கன்னி: 
உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உழைப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்.
அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். லாபம் கூடும். 

துலாம்: 
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் கூடும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். ஒருசிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வீர். 
விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர். இறை வழிபாட்டால் மனம் தெளிவடையும். வருமானம் திருப்தி தரும். 

விருச்சிகம்: 
விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். தம்பதிக்குள் இருந்த சங்கடம் நீங்கும்.
அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பத்தில் மூழ்கும். கடன் கொடுத்தவர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர்.
கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். 

தனுசு: 
மூலம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒத்துழைப்பால் ஒரு வேலை முடியும். வரவு அதிகரிக்கும்.
பூராடம்: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலை நடக்கும். 
உத்திராடம் 1: வியாபாரத்தில் உங்கள் நினைப்பு வெற்றியாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஒருசிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். 

மகரம்: 
உத்திராடம் 2,3,4: யோகமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். வியாபார போட்டியாளர்கள் பலம் இழப்பர். நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: உங்கள் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்டிருந்த வேலைகளை நிறைவேற்றி லாபம் அடைவீர்.
அவிட்டம் 1,2: பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: நன்மையான நாள். நீங்கள் திட்டமிட்டிருந்த செயல் எளிதாக நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவியுடன் வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நேற்று இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும். 

மீனம்: 
பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நினைத்த வேலை நடக்கும். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1750891673.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!