அணையா விளக்கு போராட்டத்திற்கு வந்த சந்திரசேகரனை தடுத்தது கண்டிக்கத்தக்க விடையம்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

#SriLanka #Jaffna #Protest #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
அணையா விளக்கு போராட்டத்திற்கு வந்த  சந்திரசேகரனை தடுத்தது கண்டிக்கத்தக்க விடையம்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

செம்மணி மனிதபுதைகுழி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தார்.

 செம்மணி மனிதபுதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி இடம்பெற்ற அணையா விளக்குப் போராட்டம் இறுதி நாளாக நேற்று இடம்பெற்றது. 

 குறித்த போராட்டக்களத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ராக் கலந்துகொண்ட நிலையில் அவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

 அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர். அது தவறு. அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. 

 அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் . அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும்.- என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750891673.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4