இன்றைய ராசிபலன் (27.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.
பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கார்த்திகை
1: உழைப்பு அதிகரித்தாலும் உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலையை
நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.
மிருகசீரிடம்
1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வருவாய் வரும். தொழிலை
விரிவு செய்ய திட்டமிடுவீர். மனத்தெளிவு உண்டாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
புனர்பூசம்
1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவி
செய்வீர். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கடகம்:
புனர்பூசம்
4: மகிழ்ச்சியான நாள். கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர். பெரியோர் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பூசம்: நேற்று இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ஆயில்யம்:
உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம்
அதிகரிக்கும். உதவி என்று கேட்போருக்கு உதவி செய்வீர்.
சிம்மம்:
மகம்:
நினைப்பது நடக்கும். செலவு அதிகரித்தாலும் உங்கள் முயற்சி நிறைவேறும்.
வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.
பூரம்:
நீங்கள் நினைப்பது நடக்கும். எதிர்பார்த்தது கிடைக்கும். மனதில் புதிய
நம்பிக்கை பிறக்கும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை விலகும்.
உத்திரம் 1:
நேற்று வரை தடைபட்டிருந்த வேலை நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும்.
விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.
கன்னி:
உத்திரம் 2,3,4: லாபமான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி எளிதாகும்.
அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் கனவு நனவாகும்.
துலாம்:
சித்திரை 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சுவாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். மேலோரின் சந்திப்பு நிகழும்.
விசாகம்
1,2,3: எதிலும் உங்களின் நேரடிப் பார்வை தேவை. பிறரை நம்பி ஒப்படைக்கும்
வேலை இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
விருச்சிகம்:
விசாகம் 4: நன்மையான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.
அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் உங்கள் வேலை நடக்கும்.
கேட்டை: பிறரை அனுசரித்துச்சென்று வேலைகளை முடித்துக்கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
தனுசு:
மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும். கவனமாக செயல்படுவது நல்லது.
உத்திராடம் 1: சந்திராஷ்டமம் என்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் கவனம் சிதறும். மனம் குழப்பம் அடையும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் இருந்த தடை விலகும். மறைமுகத் தொல்லை நீங்கும். நண்பர்கள் அவசர வேலைகளை முடிப்பீர்.
திருவோணம்:
சிந்தித்து செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். விருப்பம்
நிறைவேறும். தம்பதிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேற்றுவீர்.
கும்பம்:
அவிட்டம் 3,4: யோகமான நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி வெற்றியாகும்.
சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: குடும்பத்தினருடன் கோயில்களுக்கு சென்று வருவீர். ஒரு சிலர் பிறந்த ஊருக்குச் சென்று உறவினர்களை சந்திப்பீர்.
உத்திரட்டாதி:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை
முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
ரேவதி: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த சொத்துப்பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். செல்வாக்கு உயரும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



