ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு

#Actor #TamilCinema #Award #Oscar
Prasu
11 months ago
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு

திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலில், கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் உறுப்பினராக சம்மதித்தாள், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். 

கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். 

அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751058316.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4