மணற்காட்டு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர் -அதே கடற்பரப்பில் சடலமாக மீட்பு!

#SriLanka #Jaffna #Death #Fisherman #Lanka4 #Missing #SHELVAFLY
Mayoorikka
1 year ago
மணற்காட்டு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர் -அதே கடற்பரப்பில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். வழமையாக காலை 9 :00 மணியளவில் கரை திரும்பும் குறித்த மீனவர் அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது. 

 இதனை அவதானித்த தேடிச்சென்ற மீனவர்கள் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேசகத்தில் கட்டுமரத்தை கரைக்கு கொண்டுவந்தனர்.

 இந்நிலையில் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாணல்போன மணல்காடு மீனவரை பல படகுகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 இரண்டு நாளும் சடலம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று காலை சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751062409.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4