இயக்குனர் வெற்றி மாறனிடம் நஷ்ட ஈடு கோரும் நடிகர் தனுஷ்

#Actor #TamilCinema #Case #Movie
Prasu
11 months ago
இயக்குனர் வெற்றி மாறனிடம் நஷ்ட ஈடு கோரும் நடிகர் தனுஷ்

'தக் லைஃப்' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். 

இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்பட்டது. 

படத்திற்கு ராஜன் வகையறா என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாக அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் என் ஓ சி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் அதற்கு 20 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய திரைப்படங்கள் தனுஷிற்கு பெரிய திருப்பு முனையாக இருந்தாலும் தனுஷ் இப்படி வெற்றி மாறனிடமே நஷ்ட ஈடு கேட்ட தகவல் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1751136739.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4