மெக்னீசியம் சத்து எந்தெந்த உணவுகளில் இருக்கிறது???

#Food
Soruban
11 months ago
மெக்னீசியம் சத்து எந்தெந்த உணவுகளில்  இருக்கிறது???

சமீப காலமாக சமூக ஊடகங்களில் மெக்னீசியம் ஒரு பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் மெக்னீசியம் தொடர்பான பதிவுகளும் சமீபத்தில் அதிகரித்துள்ளன. 

மெக்னீசியம் உங்கள் உடல்நலத்துக்கு எவ்வளவு முக்கியமானது? நீங்கள் போதுமான அளவு மெக்னீசியம் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? என்பது தான். நமது அன்றாட உணவில் காணப்படும் ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்தான மெக்னீசியம், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. ஏனெனில், தாவரங்களுக்கு பச்சை நிறத்தை தரும் குளோரோஃபிலில் மெக்னீசியம் காணப்படும் . சுத்திகரிக்கப்படாத தானியங்கள், பருப்புகள், மற்றும் விதைகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இதுதவிர, சில மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்களிலும் மெக்னீசியம் குறைந்த அளவில் காணப்படுகிறது. பிரேசில் முந்திரி, ஓட்ஸ் தவிடு, பழுப்பு அரிசி (நடுத்தர வகை), முந்திரி, கீரை மற்றும் பாதாம் போன்ற உணவுகளில் மெக்னீசியம் போதுமான அளவில் உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

images/content-image/2024/07/1751968810.jpg

மற்றொரு ஆய்வு சியா விதைகளிலும், பூசணி விதைகளிலும் மெக்னீசியம் உள்ளது என்று கூறுகிறது. "நீங்கள் தினமும் உப்பு சேர்க்காத முழு தானியங்களை சாப்பிட்டு, பல்வேறு வகையான பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்தால், தினசரி உங்களுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்கிறார் பிரிட்டிஷ் உணவுமுறை சங்கத்தின் ஆலோசகர் உணவியல் நிபுணரும் செய்தித் தொடர்பாளருமான ரெபேக்கா மெக்மனமோன்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4