விடுதிகள் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அதிரடி அறிவிப்பு

#SriLanka #Nallur #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
விடுதிகள் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அதிரடி அறிவிப்பு

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெற்றுக்கொண்ட விண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் புதன் கிழமை (30) மாலை 4 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும் என அவரின் அறிவிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்து தங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4