கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர்

#SriLanka #NorthernProvince #Governor #Village #Visit
Prasu
1 year ago
கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயதத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிரிதாகரன், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஷ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த 100 ஏக்கர் காணி கொண்ட மூலிகை தோட்டத்தின் ஒரு பகுதி அண்மையில் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளதால் அதன் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது. மூலிகை தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதிலுள்ள சவால்கள் அதற்கு ஏதுவான சாதக வழிவகைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மேலும், தோட்டத்தின் தற்போதைய நிலைமைகள், மூலிகை செய்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் நிலைமைகள் குறித்து துறைசார் அதிகாரிகள், விவசாயிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார். 

மாகாண மூலிகைக் கிராமத்தில் அமைந்துள்ள கிராமிய சித்த வைத்தியசாலையினையும் வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டர். மேலும் குறித்த வளாகத்தில் மூன்று மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752953652.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4