முன்னாள் எம்.பிக்கள்: ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்ல திட்டம்

#SriLanka #Parliament #Geneva
Soruban
1 year ago
முன்னாள் எம்.பிக்கள்: ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்ல திட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு, தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் பல வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள்.

ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4