பிரபல குணச்சித்திர நடிகர் மதன்பாபு 71வது வயதில் காலமானார்

#Death #Actor #TamilCinema #Chennai #comedy
Prasu
10 months ago
பிரபல குணச்சித்திர நடிகர் மதன்பாபு 71வது வயதில் காலமானார்

சினிமா நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை. 

புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4