தூதுவளையின் மருத்துவ குணங்கள் ....

#Health #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
9 months ago
தூதுவளையின் மருத்துவ குணங்கள் ....

தூதுவளையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டால் தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி பிரச்னைகள் தீரும். தூதுவளையில் ரசம், சூப் செய்தும் சாப்பிடலாம். நெஞ்சுச்சளி, இருமல் பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. 

ஐந்து இலைகளுடன் சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து நசுக்கி, சாறு எடுத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் கொடுத்தால் குணம் கிடைக்கும். கைப்பிடி அளவு இலையை மையாக அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடலாம். 

கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தியாகவும் செய்து சாப்பிடலாம். தொண்டைவலி குணமாகும். தூதுவளை இலைகளை நெய்யில் வதக்கி, துவையலாக்கி வாரத்தில் இரண்டு நாள்கள் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறு விலகும். உடல் வலிமை பெறும்.

கைப்பிடி அளவு தூதுவளை இலைகளுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு தலா 10 கிராம் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சவும். இந்தக் கஷாயத்தை 50 மி.லி அளவு தினம் அருந்தினால் தொண்டைச்சதை கரையும்.

தூதுவளைப் பூக்களைப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். நெய்யில் வதக்கி, தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்...உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த லங்கா 4 உடன் இணைந்திருங்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4