வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 19 (October 19)

#people #history #Lanka4 #World
Prasu
8 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 19 (October 19)

அக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர்.
  • 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான்.
  • 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
  • 1596 – சான் பிலிப் என்ற எசுப்பானியக் கப்பல் சப்பான் கரையில் மூழ்கியது.
  • 1781 – வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரில் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவின் பிரதிநிதிகள் சியார்ச் வாசிங்டனிடம் சரணடைந்தனர்.
  • 1805 – நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகர சமரில் ஆஸ்திரியாவின் தளபதி மாக்கின் இராணுவம் நெப்போலியன் பொனபார்ட்டிடம் சரணடைந்தது. 30,000 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 10,000 இறந்தனர்.
  • 1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
  • 1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
  • 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.
  • 1866 – ஆஸ்திரியா வெனிட்டோ, மாந்துவா ஆகியவற்றை பிரான்சிடம் கையளித்தது. பிரான்சு உடனடியாகவே அவற்றை இத்தாலியிடம் கொடுத்தது.
  • 1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.
  • 1912 – இத்தாலி திரிப்பொலி நகரை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
  • 1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
  • 1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
  • 1943 – காச நோய்க்கான இசுட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.
  • 1944 – குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.
  • 1950 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
  • 1950 – சீனா கொரியப் போரில் இணைந்தது. பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் ஐநா படைகளை எதிர்க்க யாலு ஆற்றைத் தாண்டினர்.
  • 1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.
  • 1956 – சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.
  • 1960 – பனிப்போர்: அமெரிக்கா கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
  • 1974 – நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
  • 1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
  • 1983 – கிரெனாடாவில் அக்டோபர் 14 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
  • 1987 – அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் குதங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
  • 1988 – பிரித்தானிய அரசு சின் பெயின் மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது வானொலி, தொலைக்காட்சித் தடை விதித்தது.
  • 2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 146 சிறுவர்கள், 142 பெண்கள் உட்பட 353 பேர் உயிரிழந்தனர்.
  • 2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
  • 2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசைனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.
  • 2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
  • 2013 – புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 105 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

  • 1862 – அகுஸ்தே லூமியேர், பிரான்சியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1954)
  • 1888 – வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (இ. 1972)
  • 1895 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1990)
  • 1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1995)
  • 1913 – வினிசியசு டி மோரேசு, பிரேசில் கவிஞர் (இ. 1980)
  • 1917 – சரத்சந்திர சங்கர் சிறீகாந்த், இந்தியக் கணிதவியலாளர்
  • 1919 – மன்னை நாராயணசாமி, தமிழக அரசியல்வாதி
  • 1924 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (இ. 2018)
  • 1931 – ஜான் லே காரே, ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர்
  • 1942 – ஜிம் ரோஜர்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், நூலாசிரியர்
  • 1945 – ஆங்கசு டீட்டன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளர்
  • 1946 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)
  • 1953 – மதன் பாப், நகைச்சுவை நடிகர் (இ. 2025)
  • 1955 – ஜீன் கம்பாண்டா, ருவாண்டா அரசியல்வாதி, இனப்படுகொலைக் குற்றவாளி
  • 1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்
  • 1961 – சன்னி தியோல், இந்திய நடிகர்
  • 1962 – நவரத்தினம் கேசவராஜன், ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2021)
  • 1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4