தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: குற்றவாளி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வடக்கே உள்ள நன்கு அறியப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து ஆசிரியர்களும் தாக்குதல்தாரியும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தாக்குதல்தாரி பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தனது தாத்தா பாட்டிகளையும் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இரண்டு வயதானவர்கள் வீட்டில் இறந்து கிடந்ததாக தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் 14 வயது மாணவன் தனது தாத்தா பாட்டியை சுட்டுக் கொன்றான், பின்னர் தாய்லாந்தின் நோந்தபுரி மாகாணத்தில் உள்ள டெப்சிரின் பள்ளியின் நோந்தபுரி கிளையில் உள்ள தனது பள்ளிக்குச் சென்று ஐந்து ஆசிரியர்களைக் கொன்றான் என்று தாய்லாந்தின் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றவாளி பயன்படுத்திய 9 மிமீ கைத்துப்பாக்கி, ஆசிரியராக இருந்த அவனது தாத்தாவுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே