வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 22 (October 22)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 22 (October 22)

அக்டோபர் 22 (October 22) கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.
  • 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார்.
  • 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
  • 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1784 – உருசியா அலாஸ்காவில் கோடியாக் தீவில் குடியேற்றத்தை அமைத்தது.
  • 1797 – பதிவு செய்யப்பட்ட முதலாவது வான்குடைப் பாய்ச்சல் அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிசு நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
  • 1844 – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
  • 1859 – எசுப்பானியா மொரோக்கோ மீது போர் தொடுத்தது.
  • 1877 – இசுக்காட்லாந்தில் இடம்பெற்ற பிளான்டையர் சுரங்க விபத்தில், 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
  • 1878 – செயற்கை ஒளிக்கு கீழ் முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
  • 1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
  • 1927 – நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி செருமனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  • 1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.
  • 1957 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.
  • 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
  • 1964 – பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.
  • 1964 – பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
  • 1965 – இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
  • 1966 – சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
  • 1968 – நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
  • 1970 – துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
  • 1972 – வியட்நாம் போர்: ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.
  • 1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.
  • 1978 – இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையாக பதவியேற்றார்.
  • 1987 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
  • 1999 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிசு பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
  • 2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • 2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
  • 2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
  • 2013 – ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தது.

பிறப்புகள்

  • 1511 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1553)
  • 1811 – பிரான்சு லிசித்து, அங்கேரிய இசைக்கலைஞர் (இ. 1886)
  • 1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923)
  • 1870 – செ. இராசநாயகம், ஈழத்து வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1940)
  • 1881 – கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1958)
  • 1887 – ஜான் ரீட், அமெரிக்க ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1920)
  • 1900 – அஷ்பகுல்லா கான், இந்திய விடுதலைப் போராளி (இ. 1927)
  • 1902 – டபிள்யூ. தகநாயக்க, இலங்கைப் பிரதமர், அரசியல்வாதி (இ. 1997)
  • 1905 – கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், கதிர்வீச்சுப் பொறியியலாளர் (இ. 1950)
  • 1907 – எஸ். டீ. சௌலா, இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1995)
  • 1919 – எச். வேங்கடராமன், தமிழகத் தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1991)
  • 1919 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (இ. 2013)
  • 1922 – ஆ. துரையரசன், தமிழக அரசியல்வாதி (இ. 1988)
  • 1936 – நிவ்விலி அலெக்சாண்டர், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்
  • 1938 – கா. இந்திரபாலா, இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
  • 1948 – திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தமிழகத் தவில் கலைஞர் (இ. 2020)
  • 1946 – தீபக் சோப்ரா, இந்திய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
  • 1967 – கார்லோசு மென்சியா, ஒந்துராசு-அமெரிக்க நடிகர்
  • 1988 – பரினீதி சோப்ரா, இந்திய நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4