வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 30 (October 30)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 30 (October 30)

அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.
  • 758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.
  • 1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.
  • 1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  • 1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
  • 1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.
  • 1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.
  • 1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.
  • 1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.
  • 1864 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.
  • 1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).
  • 1918 – உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
  • 1925 – ஜான் லோகி பைர்டு பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.
  • 1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
  • 1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.
  • 1947 – உலக வணிக அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் நிறுவப்பட்டது.
  • 1953 – பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.
  • 1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.
  • 1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
  • 1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
  • 1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
  • 1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
  • 1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
  • 1983 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.
  • 1985 – சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
  • 1993 – வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
  • 1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
  • 2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.
  • 2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
  • 2014 – பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.
  • 2015 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

  • 1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723)
  • 1735 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826)
  • 1885 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1972)
  • 1896 – ஹேரி ஆர். ட்ரூமன், அமெரிக்கப் போர் வீரர் (இ. 1980)
  • 1898 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (இ. 1974)
  • 1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1963)
  • 1909 – ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1966)
  • 1916 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (இ. 2007)
  • 1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)
  • 1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி
  • 1941 – தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமனிய இயற்பியலாளர்
  • 1942 – சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
  • 1953 – சார்லஸ் மார்டின் ஸ்மித், அமெரிக்க நடிகர், இயக்குநர்
  • 1960 – டீகோ மரடோனா, எர்ச்செந்தீனக் கால்பந்து வீரர்
  • 1962 – கொட்னி வோல்சு, யமேக்கத் துடுப்பாளர்
  • 1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
  • 1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4