வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 31 (October 31)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? அக்டோபர் 31 (October 31)

அக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 475 – ரோமுலசு ஆகுஸ்டலசு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
  • 683 – மெக்கா முற்றுகையின் போது கஃபா தீப்பற்றி அழிந்தது.
  • 802 – பைசாந்தியப் பேரரசி ஐரீன் பதவியில் இருந்தௌ அகற்றப்பட்டார். பதிலாக நிதி அமைச்சர் நிக்கபோரசு பேரரசராக நியமிக்கப்பட்டார்.
  • 1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை செருமனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
  • 1803 – கப்டன் டிரைட்பேர்க் தலைமையில் ஆங்கிலேயப் படைகள் பண்டாரவன்னியனின் படைகளை முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர்.[1]
  • 1863 – நியூசிலாந்தில் நிலை கொண்ட பிரித்தானியப் படைகள் "வைக்காட்டொ" என்ற இடத்தில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மவோரி போர் மீண்டும் ஆரம்பமானது.
  • 1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.
  • 1903 – அமெரிக்கா, இந்தியானாபொலிசில் தொடருந்து விபத்தில் 17 உயிரிழந்தனர்.
  • 1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
  • 1918 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி 1867 ஒப்பந்தம் கைவிடப்பட்டு, அங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
  • 1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
  • 1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
  • 1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டை முடிவுற்றது. ஐக்கிய இராச்சியம் செருமனியின் முற்றுகையை முறியடித்தது.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐசுலாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை செருமனியப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
  • 1954 – அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
  • 1956 – சூயெசு நெருக்கடி: ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு சூயசு கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
  • 1961 – ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
  • 1963 – இந்தியானாபொலிசில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற புரொப்பேன் தாங்கி வெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
  • 1968 – வியட்நாம் போர்: பாரிசு அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
  • 1973 – அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
  • 1979 – மெக்சிக்கோ நகரில் வெசுட்டர்ன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
  • 1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1996 – பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
  • 1999 – ஜெசி மார்ட்டின் 11 மாதங்கள் பாய்க்கப்பலில் தனியே இடை விடாது உலகைச் சுற்றி வந்து மெல்பேர்ண் திரும்பினார்.
  • 1999 – எகிப்திய விமானம் ஒன்று மசாசுசெட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
  • 2000 – சோயுசு டிஎம்-31 விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்துவதற்கான முதலாவது குழுவினரை ஏற்றிச் சென்றது.
  • 2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
  • 2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 இல் மீண்டும் தனது 92-வது அகவையில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2011 – உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.
  • 2015 – மெட்ரோஜெட் விமானம் 9268 வடக்கு சினாயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2017 – நியூயார்க் நகரில் சுமையுந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
  • 2018 – ஒற்றுமைக்கான சிலை குசராத்து மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1632 – யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (இ. 1675)
  • 1711 – லாரா மரியா, இத்தாலிய மருத்துவர், இயற்பியலாளர் (இ. 1778)
  • 1760 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (இ. 1849)
  • 1795 – ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கலைஞர் (இ. 1821)
  • 1815 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (இ. 1897)
  • 1828 – ஜோசப் வில்சன் ஸ்வான், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1914)
  • 1861 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (இ. 1947)
  • 1875 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (இ. 1950)
  • 1887 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1975)
  • 1918 – இயான் ஸ்டீவன்சன், அமெரிக்க உளவியலாளர் (இ. 2007)
  • 1922 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் 1வது பிரதமர் (இ. 2012)
  • 1925 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (இ. 1990)
  • 1929 – முக்தா சீனிவாசன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
  • 1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2021)
  • 1933 – துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்
  • 1943 – உம்மன் சாண்டி, கேரள அரசியல்வாதி, முதலமைச்சர்
  • 1961 – சர்பானந்த சோனாவால், அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
  • 1961 – பீட்டர் ஜாக்சன்,நியூசிலாந்து நடிகர்
  • 1986 – சம்விருதா சுனில், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4