நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் உட்பட 6 பேர் கைது

#SriLanka #Arrest #Official #PradeshiyaSabha
Prasu
8 months ago
நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் உட்பட 6 பேர் கைது

நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அமைந்துள்ள பகுதியில் வீதி அமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னம் சேதப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அந்தப் பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் நெடுந்தீவு பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

images/content-image/1762458270.jpg

அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபைத் தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நான்கு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர்.

கைதான நான்கு பேரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தமிழ் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சில வருடங்களுக்கு முன்பு அந்தப் பகுதி பௌத்த வரலாற்றுடன் தொடர்புடையது எனக் கடற்படையினரால் பதாகை போடப்பட்டு சர்ச்சை எழுந்த நிலையில் அந்தப் பதாகை நீக்கப்பட்டிருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4