வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 10 (November 10)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 10 (November 10)

நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.
  • 1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
  • 1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  • 1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது.
  • 1659 – பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
  • 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
  • 1775 – ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.
  • 1847 – 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
  • 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.
  • 1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.
  • 1918 – யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.[1]
  • 1940 – உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
  • 1944 – அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.
  • 1945 – சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1970 – வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
  • 1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
  • 1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.
  • 1972 – அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
  • 1975 – 729-அடி-நீள எட்மண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
  • 1975 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.[2]
  • 1979 – வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
  • 1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1989 – பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 1989 – செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.
  • 1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
  • 2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • 2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

பிறப்புகள்

  • 1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546)
  • 1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
  • 1759 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர் (இ. 1805)
  • 1848 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1925)
  • 1905 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (இ. 1965)
  • 1906 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1987)
  • 1906 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (இ. 1988)
  • 1910 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், கவிஞர் (இ. 1974)
  • 1910 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (இ. 1987)
  • 1916 – அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. 2002)
  • 1917 – சோ. தம்பிராஜா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
  • 1918 – சுந்தர் லால் குரானா, இந்திய அரசியல்வாதி
  • 1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. 2013)
  • 1920 – தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, இந்துத்துவாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2004)
  • 1934 – அ. துரைராஜா, இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. 1994)
  • 1934 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி (இ. 2023)
  • 1935 – ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ், உருசிய வானியலாளர்
  • 1950 – கனம் ராஜேந்திரன், இந்திய அரசியல்வாதி
  • 1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)
  • 1957 – டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசியல்வாதி, துணை இராணுவக்குழுத் தலைவர்
  • 1958 – ஆனந்த் ராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்
  • 1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்
  • 1973 – விவேக் அக்னிஹோத்திரி; இந்தியத் துடுப்பாட்ட வீரர்
  • 1975 – தாமரை, தமிழகக் கவிஞர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4