வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 12 (November 12)

#people #history #Lanka4 #World
Prasu
7 months ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? நவம்பர் 12 (November 12)

நவம்பர் 12 (November 12) கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
  • 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
  • 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
  • 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
  • 1893 – அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாக்கித்தான்) ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1905 – நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
  • 1918 – ஆஸ்திரியா குடியரசாகியது.
  • 1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
  • 1927 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
  • 1928 – வெசுட்ரிசு என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: காபோன் சண்டை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுப் படைகள் காபோன், லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் வான்படை செருமனியின் திர்பித்சு போர்க்கப்பலை நோர்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
  • 1948 – டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
  • 1956 – மொரோக்கோ, சூடான், தூனிசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
  • 1956 – சூயெசு நெருக்கடி: இசுரேலிய படைகள் காசாக்கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
  • 1969 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் எர்சு வெளியிட்டார்.
  • 1970 – போலா சூறாவளி கிழக்குப் பாக்கித்தானைத் (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 500.000 பேர் வரை இறந்தனர்.
  • 1975 – கொமொரோசு ஐநாவில் இணைந்தது.
  • 1980 – நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
  • 1981 – கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
  • 1982 – லியோனீது பிரெசுனேவ் இறந்ததை அடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
  • 1989 – தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
  • 1990 – இளவரசர் அக்கிகித்தோ சப்பானின் 125-வது பேரரசராக முடிசூடினார்.
  • 1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
  • 1991 – கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
  • 1994 – இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
  • 1995 – குரோவாசிய விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1996 – சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
  • 1999 – துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
  • 2001 – நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 2001 – ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
  • 2006 – முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
  • 2011 – ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
  • 2014 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட பிலே விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் தரையிறங்கியது.
  • 2015 – பெய்ரூத் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
  • 2017 – ஈரானில் ஈராக் எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 அளவு நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

  • 1817 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892)
  • 1819 – மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899)
  • 1840 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917)
  • 1842 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1919)
  • 1866 – சுன் இ சியன், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1925)
  • 1879 – சே. ப. இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1966)
  • 1896 – சலீம் அலி, இந்திய இயற்கையியலாளர் (இ. 1987)
  • 1918 – சிறீபதி சந்திரசேகர், இந்திய கல்வியாளர், அரசியல்வாதி (இ. 2001)
  • 1920 – வல்லிக்கண்ணன், தமிழக எழுத்தாளர் (இ. 2006)
  • 1926 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி (இ. 2020)
  • 1934 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதக்குழுத் தலைவர் (இ. 2017)
  • 1940 – அம்ஜத் கான், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 1992)
  • 1947 – ரெஜினால்ட் குரே, இலங்கை அரசியல்வாதி, வடமாகாணத்தின் 5-வது ஆளுநர் (இ. 2023)
  • 1948 – அசன் ரவ்கானி, ஈரானின் 7வது அரசுத்தலைவர்
  • 1962 – சதரூபா சன்யால், இந்திய நடிகை
  • 1971 – சென் குவாங்செங், சீன-அமெரிக்க செயற்பாட்டாளர்
  • 1982 – ஆன் ஹாத்தவே, அமெரிக்க நடிகை
  • 1985 – சனம் ஷெட்டி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4