கொழும்பில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி தற்கொலைக்கு முயற்சி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவையைச் சேர்ந்த மாணவி, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சைக்கு முயற்சிக்கிறார். உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு அவர் இவ்வாறு மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்வை எதிர்கொள்வது தொடர்பான பயம் மற்றும் மன அழுத்தத்தை மாணவி அனுபவித்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
