இன்றுமுதல் டின் மீன் வகைகளுக்கு விலை நிர்ணயம்!
#SriLanka
#Fish
Mayoorikka
1 month ago
இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன் வகைகளுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
