இன்றைய ராசிபலன் (16.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Abi
7 months ago
இன்றைய ராசிபலன் (16.11.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். 

உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

வீட்டில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.முன்னேற்றம் அடையும்.

ரிஷபம்

தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். 

சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். 

உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

சிலருக்கு உடல் சோர்வு ஏற்படக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

 மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்

உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். 

தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கடகம்

காரியங்கள் அனுகூலமாக முடியும்.புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். 

இளைய சகோதர வகையில் ஆதாயம் உண் டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

 பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

சிம்மம்

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. 

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். 

கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

 சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

துலாம் சித்திரை 3,4: செலவின் வழியே நன்மை காணும் நாள். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்த படி நடக்கும்.

சுவாதி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

நேற்றைய கனவு நனவாகும். விசாகம் 1,2,3: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். திட்டமிட்டபடி நடக்கும் நாள்.

துலாம்

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக் கொள்வது ஆறுதலாக இருக்கும். 

சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண் டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்

விருச்சிகம்

அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். 

சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் பண உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.

தனுசு

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. 

பிற்பகலுக்குமேல் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் வீண் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு கிடைக்கக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

மகரம்

அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். செலவுகளால் கையிருப்பு கரையும். 

வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். தந்தையுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கும்பம்

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் 

கணவன் – மனைவிக் கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

 பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்க பலமாக இருப்பார். 

சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

                                                                         

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4