முல்லைதீவில் வீட்டிற்குள் புகுந்த வெங்கிணாந்தி பாம்பு!
#SriLanka
Mayoorikka
1 month ago
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் வெங்கிணாந்தி பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த வீட்டிற்கு சென்று பாம்பினை பிடித்துள்ளார்கள்.

8 அடி நீளம் கொண்ட குறித்த பாம்பினை பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் சரணாலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
