2025ம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் விருதை பெற்ற நடிகர் அஜித்
#Actor
#TamilCinema
#Award
#ajith
#Driver
Prasu
4 weeks ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தீவிர கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமாருக்கு SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம் 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.
(வீடியோ இங்கே )