இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல்
#SriLanka
Mayoorikka
4 weeks ago
இந்து சமுத்திரத்தில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
