கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழப்பு!

#SriLanka
Mayoorikka
3 weeks ago
கொட்டுகொட  கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழப்பு!

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

 தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக முழு உபநிலைய வளாகமும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டது. 

 நேற்று (29) மாலையாகும்போது நீர்மட்டமானது கட்டுப்பாட்டுப் பலகை மட்டத்தை அடைந்துள்ளதால், நிலைமை பாதுகாப்பான செயற்பாட்டு வரம்புகளை மீறியுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டிக்கத் தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!