வெள்ள அனர்த்தத்தின் பின்னர் தொற்று நோய் அபாயம்: யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல்

#SriLanka
Mayoorikka
3 weeks ago
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் தொற்று நோய் அபாயம்: யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல்

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

 அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

 மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

 மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம். ஆகவே, பொதுமக்கள் கீழ்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். 

 அசுத்தமான நீரில் நடைப்பயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை நன்றாகக் கழுவ வேண்டும். சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். 

கொதிக்கவைத்த நீரைப் பருகுவது சிறந்தது. வாழ்விடங்களை எப்போதும் தூய்மையாகப் பேண வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வேண்டியது அவசியம்.

 மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் போது தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!