நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தியொன்று லுணுவிலவுக்கும் வென்னப்புவவுக்கும் இடைப்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தியிலிருந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசரமாக தரையிறக்க முற்பட்டபோதே, குறித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிலிருந்து இரண்டு விமானப்படை சிப்பாய்கள் உள்ளிட்ட நிவாரணப் பணியாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
