வாய்த்தர்க்கம் முற்றி மருமகன் மீது மாமன் வாள்வெட்டு! யாழில் சம்பவம்

#SriLanka
Mayoorikka
7 months ago
வாய்த்தர்க்கம் முற்றி மருமகன் மீது மாமன் வாள்வெட்டு!  யாழில் சம்பவம்

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது.

 வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாகவும், மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

 படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் நிதீஸ்குமார் ஆவார்.

 இதேவேளை சிவகுமார் நிதிஸ்குமாரை வெட்டியவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4