வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பில் எச்சரிக்கை!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு பொலிஸ்பிரிவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் மூலங்களை அணுகுவதற்கு முன் அதிகாரபூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெற வேண்டும்.
அத்துடன் ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
