யாழில் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன: அரச அதிபர்

#SriLanka
Mayoorikka
3 weeks ago
யாழில் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன: அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். 

 யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் (02) 3,729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 நாளை (03) 1,716 சிலிண்டர்களும், நாளை மறுதினம் (04) 2,217 சிலிண்டர்களும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதாகத் தெரிவித்தார். 

 பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கட்டம் கட்டமாகத் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!