ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் மேலும் 02 விமானங்கள் இலங்கைக்கு வருகை!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய மேலும் 02 விமானங்கள் இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து விமானங்களான இரண்டு C-17 ரக விமானங்கள் அபுதாபியில் இருந்து நாட்டை வந்தடைந்தன.
அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்குகின்றன.
இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இந்நாட்டிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
