ஒருநாள் சம்பளத்தை வழங்கும் ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள்!
#SriLanka
Mayoorikka
2 weeks ago
ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
மாகாணத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் இதற்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாக ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதுதொடர்பாக விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'டித்வா' சூறாவளியினால் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
