டித்வா' புயல் காரணமாக மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு!

#SriLanka
Mayoorikka
3 weeks ago
டித்வா' புயல் காரணமாக மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு!

டித்வா' புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் சுட்டிக்காட்டியுள்ளார். 

 இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, சிறுவர்களுக்குத் தேவையான அவசர உதவிச் சேவைகள் மற்றும் உயிர்காக்கும் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சிறுவர்களுக்காக அவசர கால கல்விப் பொதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!