அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607ஆக அதிகரிப்பு: 214 மாயம்
#SriLanka
Mayoorikka
2 weeks ago
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 214 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில், நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 பேர் வெள்ளப் பாதிப்பு, இடம்பெயர்வு மற்றும் சொத்து சேதங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அத்துடன் 4, 164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
