2026ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

#SriLanka #Parliament #Vote #budget 2026
Prasu
2 weeks ago
2026ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2026 ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாதீட்டுக்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டன. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும் எதிராக வாக்களித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தனர்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 7ம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

2ம் வாசிப்புமீதான விவாதம் 8ம் திகதி ஆரம்பமானது. 14ம் திகதிவரை விவாதம் நடைபெற்றது. 14ம் திகதி மாலை 2 ம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. 

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் 15ம் திகதி ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நேற்று மாலை நடைபெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!