சந்தைகளில் இருந்து அரிசியை கொள்வனவு செய்யும்போது அவதானம் தேவை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியை பதப்படுத்தி நுகர்வு அரிசியாக சந்தைக்கு வழங்கும் மோசடி பற்றிய தகவலை பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) கண்டுபிடித்துள்ளனர்.
கண்டியின் ஹரிஸ்பட்டுவவில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசியை விநியோகம் செய்ய முற்பட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக PHIs தெரிவித்தனர்.
இந்த நாட்களில் அரிசி வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருந்தால் அந்தந்த பகுதியில் உள்ள பொது சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
