அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பிச்சைக்காரர்களா? விபரம் உள்ளே

#SriLanka
Mayoorikka
2 days ago
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பிச்சைக்காரர்களா? விபரம்  உள்ளே

அனர்த்தம் என்பது அடுத்தவர்களுக்கு கூறி வருகின்ற சம்பவம் அல்ல. அது ஏழைகள் பணக்காரர்கள் என பார்ப்பதில்லை. 

 எழைகளை பாழ் கிணறும்குள்ளும் வீழ்த்தும். பணக்காரர்களை ஏழைகளாக்கிவிடும். இருந்தும் அடுத்தவரின் உதவியோடு அவர்கள் தம் நிலைக்கு உயர்வதும்முண்டு. அவ்வகையில் அனர்த்த உதவிகள் என்பது ஒரு அன்னதானம் போன்றது. 

அதை அவர்கள் பெறுவதை காட்டாமல் செய்வதே கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் திருப்தி. இப்பொழுது அவர்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

நாளை இதே நிலை எமக்கு வரலாம். எனவே கொடுக்கும் கொடையை வாங்குபவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே தெரிவதுபோல தானம் செய்யவேண்டும். அதில் அரசியல்,. மற்றும் ஊடக நலனுக்கு உபயோகிக்காமல் தயவுசெய்து உங்கள் கொடைகளை கொடுங்கள்.

 வாங்குகின்றவர்கள் பிச்சை எடுக்கவில்லை. உரிமையோடு உங்கள் உதவியை பெறுகிறார்கள் மீண்டும் அவர்களும் அதை பல மடங்காக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் திருப்பி கொடுப்பார்கள்.

அந்தவகையில் அண்மையில் இலங்கையில்  தாக்கிய டித்வா புயல் ஏழைகள், பணக்காரர்கள் என்று இல்லாமல் அனைவரையும் நிர்கதியாக்கி விட்டு சென்றுள்ளது. 

 இந்த அனர்த்தத்தில் பலர் பாதிக்கப்பட்டு தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்து இடைத்தங்கல் முகாம்களில் நிர்க்கதியாகி இருக்கின்றனர்.

 அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களும் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். மேலும் அரசியல்வாதிகளும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

 இந்தநிலையில் யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை உடனடியாக சென்று வழங்குவது உண்மையில் வரவேற்கத்தக்க விடையமாகும்.

 ஆனால் நிவாரணங்களை வழங்கும் போது அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து ஊடகங்கள், சமூகவலைத்தளங்களில் போடுவது என்பது மிகவும் ஒரு கீழ்த்தரமான செயலாகவே பார்க்கப்படுகின்றது.

images/content-image/1765365530.jpg

 உண்மையில் உதவி என்பது, வலது கையால் கொடுத்தால் இடது கைக்கு தெரியாக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் தற்பொழுது கொடுக்கப்படும் உதவிகள் எல்லாம் எதோ பிரபல்யத்திற்கும் விடியோவிற்கும் கொடுக்கின்ற வகையில் ஒரு சிலரின் தோற்றப்பாடு அமைகின்றது. 

 உண்மையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வது என்றால் அதனை ஆத்மார்த்த ரீதியாக செய்யுங்கள். அதனை புகைப்படம் எடுத்து பொது வெளிகளில் போடாதீர்கள். 

images/content-image/1765375350.jpg

அவ்வாறு செய்யும் போது உதவி பெறுபவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்கள் இதற்கு முன்னர் யாரிடமும் உதவி பெறாதவர்களாக இருந்திருக்கலாம், மிகவும் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கலாம், மிகவும் கௌரவமாக வாழ்ந்திருக்கலாம் அவர்களுக்கு எல்லாம் இவ்வாறு உதவி பெறுவது மிகவும் சங்கடமாக இருக்கும். 

அப்படி இருக்கும் சந்தர்ப்பங்களில் நீங்கள் புகைப்படங்களை எடுக்கும் போது அவர்களுக்கு மேலும் சங்கடத்தையும், தலைகுனிவையும் கொடுக்கும். பல அரசியல்வாதிகள் ஒரு சிறிய பொருளைக் கொடுத்துவிட்டு புகைப்படத்திற்கு அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள் என அவர்களை மேலும் கஷ்டப்படுத்துகின்றனர். அவ்வாறான செயற்பாடு என்பது ஒரு அருவருக்கத்தக்க செயற்பாடாகும்.

 பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையில் ஓடிச் சென்று கஷ்டங்களையும் பார்க்காமல் இரவு பகல் என்று உதவிகளை வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அது பாராட்டபட வேண்டிய விடையம். 

இனம், மதம், மொழி கடந்து இந்த இக்கட்டான சூழலில் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வருகின்றமை பெருமைக்குரிய விடையம். ஆனால் அதனை புகைப் படம் எடுத்து தற்பெருமைக்காக பொது வெளியில் போடுவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!