மியான்மரில் மருத்துவமனை மீது வான்வழி தாக்குதல் - 34 பேர் உயிரிழப்பு
#Death
#Hospital
#people
#Attack
#Myanmar
Prasu
2 days ago
மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )