தாய்லாந்து, கம்போடியாவில் அமைதி திரும்புமா? ட்ரம்ப் கருத்து!
#SriLanka
#Cambodia
#Thailand
Thamilini
2 hours ago
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இராணுவப் போர் நிறுத்தம் "இன்று மாலை அமலுக்கு வரும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் இட்டுள்ள பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் "இன்று மாலை அமலுக்கு வரும் வகையில், அனைத்து துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும், நான் செய்த அமைதி ஒப்பந்தம் மீண்டும் நிலைநிறுத்தப்படும்," என்று கூறியுள்ளார்.
தாய் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் கம்போடிய பிரதமர் ஹுன் சென் ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் தாய் அல்லது கம்போடிய பிரதமர்கள் இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.